Monday, May 20, 2024
Home » கலன்பிந்துனுவெவ துனுமண்டலாவ கிராமத்தின் பிரதான வீதி புனரமைப்பு

கலன்பிந்துனுவெவ துனுமண்டலாவ கிராமத்தின் பிரதான வீதி புனரமைப்பு

பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் பங்கேற்பு

by mahesh
March 6, 2024 12:50 pm 0 comment

ஹொரொவ்பத்தான தேர்தல் தொகுதிக்குட்பட்ட கலன்பிந்துனுவெவ துனுமண்டலாவ கிராமத்தின் பிரதான வீதியினை “கார்பட்” இட்டு செப்பனிடும் பணிகள் அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானுவால் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

துனுமண்டலாவ கிராம வீதியானது, சேதமடைந்திருந்த நிலையில், குறித்த வீதியூடாக பயணிக்கும் பொது மக்கள் போக்குவரத்து செய்வதில் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த வீதியின் நிலை பற்றி பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானுக்கு தெரியப்படுத்தியதைடுத்து, அவர் குறித்த விடயத்தினை பெருந்தெருக்கள் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுச் சென்றுள்ளார்.

அதன்படி, 2024 ஆம் ஆண்டின் “1500 கி.மீ வீதிகளை அபிவிருத்தி செய்தல் – புதிய நாடு புதிய பாதை” என்ற வேலைத்திட்டத்தின் கீழ், போக்குவரத்து, பெருந்தெருக்கள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தனவின் ஆலோசனைக்கமைய, குறித்த வீதியினை புனர் நிர்மாணம் செய்வதற்கு நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே, துனுமண்டலாவ இலுக்வெவ சந்தி முதல் வெலிகொல்லாவ வரையிலான 02 கி.மீ வீதியில் கார்பட் இடும் பணிகள் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், மதவாச்சி பிரதேச வீதி அபிவிருத்தி பொறியியலாளர் காரியாலயத்தின் பிரதான பொறியியலாளர், கலன்பிந்துனுவெவ பிரதேச சபையின் செயலாளர் உட்பட பொது மக்கள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(திறப்பனை தினகரன் - அநுராதபுர ம் மேற்கு தினகரன் நிருபர்கள் )

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT