Monday, May 20, 2024
Home » தென்னைகளில் ஒருவித நோய்த் தாக்கம் பரவல்

தென்னைகளில் ஒருவித நோய்த் தாக்கம் பரவல்

by mahesh
March 6, 2024 11:40 am 0 comment

திருகோணமலையின் தம்பலகாமம் பிரதேசத்தில் ஏக்கர் கணக்கான காணிகளிலுள்ள தென்னை மரங்களுக்கு ஒருவித நோய்த் தாக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் தேங்காய் உற்பத்தி பாரியளவில் வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும், விவசாயிகள் தெரிவித்தனர்.

கடந்த ஒக்டோபர், நவம்பர், டிசெம்பர் மாதங்களில் பெய்த அதிகளவான மழையின் பின்னர் தென்னை மரங்களில் வெண்ணிறப் பூச்சியின் நோய்த் தாக்கம் பரவ ஆரம்பித்துள்ளதாகவும் இதனால் எதிர்காலத்தில் தென்னை மரங்கள் அழிவடையும் அபாயம் உள்ளதாகவும், விவசாயிகள் தெரிவித்தனர்.

தென்னை மரங்களிலுள்ள இந்த நோய்த் தாக்கம் தற்போது கொய்யா, மா, வாழை போன்றவற்றுக்கும் பரவுவதாகவும், விவசாயிகள் மேலும் தெரிவித்தனர்.

இந்த நோயைக் கட்டுப்படுத்த கமநல சேவைகள் திணைக்களம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், விவசாயிகள் கேட்டுக்கொண்டனர்.

கிண்ணியா மத்திய நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT