Monday, May 20, 2024
Home » UNFPA 50 வருட பூர்த்தி முத்திரை வெளியீடு

UNFPA 50 வருட பூர்த்தி முத்திரை வெளியீடு

by damith
March 4, 2024 6:00 am 0 comment

1994 இல் கெய்ரோவில் நடைபெற்ற மக்கள் தொகை மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச மாநாட்டின் (ICPD) 30 ஆவது ஆண்டு நிறைவையும், ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் (UNFPA) இந் நாட்டில் செயற்பாடுகளை ஆரம்பித்த 50 ஆவது ஆண்டு நிறைவையும் குறிக்கும் வகையில் கொழும்பில் விசேட ஞாபகார்த்த நிகழ்வு நடைபெற்றது.

ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியம் (UNFPA) இந்த நாட்டில் ஐம்பதாண்டுகளைக் குறிக்கும் வகையில் 50 ரூபா பெறுமதியான விசேட நினைவு முத்திரையை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தலைமையில் வெளியிட்டது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, முதல் பெண்மணி பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க, சுகாதார இராஜாங்க அமைச்சர் டொக்டர் சீதா அரம்பேபொல, ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஹரிணி அமரசூரிய, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT