Thursday, May 16, 2024
Home » மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி கட்டமைப்புக்கு இந்தியா உதவி
நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் நயினாதீவில்

மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி கட்டமைப்புக்கு இந்தியா உதவி

10.995 மில். அமெரிக்க டொலர் ஒப்பந்தம் நேற்று கைச்சாத்து

by mahesh
March 2, 2024 7:00 am 0 comment

2025ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் திட்டத்தை நிறைவு செய்ய உத்தேசம்

நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் நயினாதீவில் மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக இந்திய அரசாங்கம் 10.995 மில்லியன் அமெரிக்க டொலரை இலங்கைக்கு மானியமாக வழங்கியுள்ளது.

இதற்கான ஒப்பந்தம் நேற்று கைச்சாத்திடப்பட்டது. இலங்கையில் இந்தியா மேற்கொண்டுள்ள முக்கிய திட்டங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

இதன்படி நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் நயினாதீவிலேயே இந்த மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

2025ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் திட்டத்தை நிறைவு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவை தளமாகக் கொண்ட யு- சோலர் கிளீன் எனர்ஜி சொலுசன்ஸ் என்ற நிறுவனம் இந்த திட்டத்தின் கீழ் 530 கிலோவாட் காற்றாலை மின்சாரம், 1,700 கிலோவாட் சூரியசக்தி, 2,400 கிலோவாட் மின்கலம் சக்தி மற்றும் 2,500 கிலோவாட் டீசல் மூலம் மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை உருவாக்க உள்ளது.

இந்தத் திட்ட உதவிகளுக்காக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ ஜா, முன்னாள் உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உட்பட இந்திய அதிகாரிகளுக்கு அமைச்சர் கஞ்சன விஜயசேகர நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT