காலம் சென்ற முன்னாள் நிதி அமைச்சர் றொனி டி மெல்லின் இறுதிக் கிரியைகள் இன்று (01) வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கு மாத்தறை றுகுணு பல்கலைக் கழக விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இன்றைய தினம் தென் மாகாணம் முழுவதும் துக்க தினமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளதோடு அரச நிறுவனங்களில் தேசிய கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறும் தென் மாகாண ஆளுநரால் பணிக்கப்பட்டுள்ளது.
அவரது பூதவுடல் நேற்று (29) கொழும்பிலிருந்து பிறபகல் 2 மணியளவில் மாத்தறை – வெல்ல மடவுக்கு கொண்டு வரப்பட்டது. பிற்பகல் 4 மணியளவில் றுகுணு பல்கலைக்கழக வேந்தர், உபவேந்தர் மற்றும் றுகுணு பல்கலைக்கழக அலுவலக அதிகாரிகள் பூதவுடலை பொறுப்பேற்றனர். மக்கள் அஞ்சலிக்காக இன்று 3.30 மணி வரை பூதவுடல் றுகுணு பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட விசேட மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது.
அங்கிருந்து விளையாட்டுத்திடலுக்கு இறுதிக் கிரியைகளுக்காக எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு மத அனுஷ்டானங்களுடன் இறுதிக்கிரியைகள் இடம் பெறவுள்ளது..
(வெலிகம தினகரன் நிருபர்)