அண்மையில் முடிவடைந்த மியூனிச் பாதுகாப்பு மாநாட்டில் (MSC) சின்ஜியாங்கில் சீனாவின் மனித உரிமை மீறல்கள் குறித்து உலக உய்குர் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் பல இராஜதந்திரிகள், ஊடகவியலாளர்கள், முக்கிய தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் உயரதிகாரிகள் பங்குபற்றினார்கள். இங்கு உலக உய்குர் காங்கிரஸின் தலைவரான டோல்கொன் இசா, கலந்துகொண்டார்.
மாநாட்டின் நிறைவில் தனது ‘X’ பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள இசா, உலக இராஜதந்திரிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசியல்வாதிகள் மற்றும் பலர் கலந்துகொள்ளும் வெவ்வேறு கலந்துரையாடல்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. பாதுகாப்பு பற்றிய முக்கிய விவாதங்கள் நடந்தன. நாம் எதிர்கொள்ளும் விடயங்கள் பற்றியும் பேசினோம்” என குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், பல்வேறு கலாச்சாரங்களைப் பற்றி விவாதிக்கும் மன்றமாக இந்த அமைப்பு செயல்படுகிறது. உலக உய்குர் காங்கிரஸ் இங்கு ஆராயப்பட்ட விடயங்களை சமூக ஊடக தளமான ‘X’ க்கு எடுத்துச் சென்றது .நமது கலாச்சாரத்தைப் பாதுகாப்பதன் அவசியத்தையும், மாற்று இயக்க ஒற்றுமையின் முக்கியத்துவத்தையும் இந்த மாநாடு எடுத்துக்காட்டுகிறது.இதில் கலந்துகொண்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ஊடகவியாளர்கள், அரசியல்வாதிகயுளுக்கு நன்றி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
” டோல்கொன் இசா, சீனாவின் இரட்டைத் தரநிலைகள், உலகெங்கிலும் உள்ள உலகளாவிய மோதல்கள் குறித்த நிலைப்பாடு குறித்து கத்தார் தூதர் ஒருவரிடம் ஒரு முக்கியமான கேள்வியைக் கேட்டார்.
“ஒருபுறம், சீனா மில்லியன் கணக்கான உய்குர்களை அடைத்து வைக்கிறது, மறுபுறம், அது பாலஸ்தீனியர்களையும் மற்ற முஸ்லிம்களையும் ஆதரிப்பதாக காண்பிக்கிறது. அவர்களின் அணுகுமுறை எவ்வளவு நேர்மையானது?” என அவர் கேள்வி எழுப்பினார்.
பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர் , ”இந்த ஆண்டு மியூனிச் பாதுகாப்பு மாநாட்டில் முக்கியமான கலந்துரையாடல்கள் நடந்தன, குறிப்பாக நமது உலகளாவிய பாதுகாப்பைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் சர்வாதிகாரப் போக்குகள், ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவரின் மரணம் பற்றியும் ஆராயப்பட்டது. சர்வாதிகாரப் போக்குகளின் நேரடி விளைவுகளான உய்குர் இனப்படுகொலை போன்ற மொத்த மனித உரிமை மீறல்களுக்கு அர்த்தமுள்ள வகையில் தீர்வு காண மியூனிச் பாதுகாப்பு மாநாடு தவறிவிட்டது. மேலும் கடந்த தசாப்தங்களில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து இங்கு பாராட்டப்பட்டது. சர்வதேச ஒழுங்கிற்கு சீனாவின் அச்சுறுத்தல் கவனிக்கப்படவில்லை. என்று அவர் மேலும் கூறினார்.
மேலும், லிதுவேனிய வெளியுறவு அமைச்சர் கேப்ரியலியஸ் லாண்ட்ஸ்பெர்கிஸ், முன்னாள் குரோஷிய ஜனாதிபதி கோலிண்டா கிராபர் மற்றும் போலந்து வெளியுறவு அமைச்சர் ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி ஆகியோரையும் டோல்கொன் இசா சந்தித்தார்.
சின்ஜியாங்கில் மனித உரிமைகள் நிலவரம் குறித்து ஆராயப்பட்டது குறிப்பிடத்தக்கது,