உஸ்பகிஸ்தானில் மாசடைந்த இருமல் மருந்தால் 68 சிறுவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் 23 பேருக்கு சிறைத் தண்டை விதிக்கப்பட்டுள்ளது.
வரி ஏய்ப்பு, தரமற்ற அல்லது போலி மருந்தை விற்பனை செய்தது, பதவியைத் தவறாகப் பயன்படுத்தியது, கவனமின்மை, போலி ஆவணங்களைத் தயாரித்தல், லஞ்சம் கொடுத்தல் ஆகிய குற்றங்களை அவர்கள் புரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவின் மரியன் பயோடெக் நிறுவனம் தயாரித்த மருந்துகளை உஸ்பகிஸ்தானில் விற்பனை செய்த குராமேக்ஸ் மெடிக்கல் நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர் ராகவேந்திரா பிரதார் சிங்கிற்கு அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. உயிரிழந்த சிறுவர்களின் குடும்பங்களுக்குத் தலா 80,000 டொலர் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.