710
சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுணாவில் பகுதியில் நேற்றுமுன்தினம் காலை வீட்டு முற்றத்திலிருந்து குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நுணாவில் பகுதியைச் சேர்ந்த 55 வயதான குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குடும்பப்பிரச்சினை காரணமாக இவர் தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனை மற்றும் மரண விசாரணைகளுக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
(சாவகச்சேரி விசேட நிருபர்)