Sunday, May 5, 2024
Home » கிழக்கு, ஊவா, வடமத்தி; நுவரெலியா, மாத்தளையில் பல முறை மழை

கிழக்கு, ஊவா, வடமத்தி; நுவரெலியா, மாத்தளையில் பல முறை மழை

- சில பகுதிகளில் மாலையில் அல்லது இரவில் மழை

by Rizwan Segu Mohideen
February 28, 2024 7:52 am 0 comment

– மலையகம் உள்ளிட்ட மேலும் சில பகுதிகளில் காற்று

இன்றையதினம் (28) கிழக்கு, ஊவா, வடமத்திய மாகாணங்களிலும் நுவரெலியா, மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது .

மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, வடமேல், தென் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30-40 கி.மீ. வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT