Sunday, May 19, 2024
Home » சர்வலோக நாயகிக்கு நன்நாளாம் இன்று

சர்வலோக நாயகிக்கு நன்நாளாம் இன்று

by Gayan Abeykoon
February 23, 2024 1:00 am 0 comment

அழகு மலைகளில்

சூழப்பட்ட

அன்னை பராசக்திக்கு

பொன்னாளாம் இன்று…

 

சர்வமும் கொண்ட

சர்வ லோக நாயகிக்கு

பஞ்சரத பவனியாம் இன்று…

 

வடம் இழுத்து பன்னாகமமே

மகிழும் அற்புதத் திருநாளாம்

இன்று…

 

நவ கலசங்களொடு நவமாய்

மின்னிடும் நவசக்திக்கு

பொன்னாளாம் இன்று…

 

ஜாதி மத பேதமின்றி

அருள் மாரி பொழியும்

மாரி அம்மனுக்கு

பொன்னாளாம் இன்று…

 

சித்திரத்தேர்கள் கட்டி

முத்தேராக வடமிழுத்து

பஞ்சரத பவனியாக உலாவரும்

மாரிக்கு அற்புத நாளும்

இன்று…

சிலிர்க்கும் சித்திரத்தேரில்

சிம்மாசனமாரூட

சிம்மவாஹினிக்கு

பொன்னாளாம் இன்று…

 

பஞ்ச ரதங்களோடு

ரத பவனி வரும் அன்னை

முத்துமாரிக்கு அருள் நிறை

நன் நாளாம் இன்று…

 

மாசிப் பௌர்ணமியில்

திருவீதி உலாக் காணும்

அன்னை முத்துமாரிக்கு

மாசி மகமாம் இன்று…

 

வானுயர்ந்து வரலாறு படைத்து

மாத்தளை மண்ணே

பெருமை கொள்ளும்

மாரி அம்பாளுக்கு

பஞ்சரத பவனியாம் இன்று…

மாத்தளை  தேவிகா

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT