Wednesday, May 15, 2024
Home » ஆடைக்கைத்தொழில், ஜவுளி, நகைகள் சர்வதேச கண்காட்சி கொழும்பில்

ஆடைக்கைத்தொழில், ஜவுளி, நகைகள் சர்வதேச கண்காட்சி கொழும்பில்

by Gayan Abeykoon
February 23, 2024 10:13 am 0 comment

டைக் கைத்தொழில் மற்றும் ஜவுளி நகைகள் தொடர்பான மூன்று சர்வதேச கண்காட்சி இம்மாதம் 29ஆம் திகதியும் மார்ச் மாதம் 1,2ஆம் திகதிகளிலும் கொழும்பு_ 10 டி.ஆர். விஜேவர்தன மாவத்தையில் அமைந்துள்ள Sri Lanka Exhibition & Convention Centre மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளன. அமெரிக்காவின் செம்ஸ் குளோபல் நிறுவனத்தினர் இக்கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளனர். 

ஜவுளித்துறையில் பிரதான வகிபாகத்தைக் கொண்டுள்ள செம்ஸ் குளோபல் பி2பி வர்த்தக கண்காட்சி நிறுவனமானது உலகளாவிய ரீதியில் நான்கு கண்டங்களில் கண்காட்சி மாநாடுகளை நடத்தி வருகின்றது. குறிப்பாக பங்களாதேஷ், பிரேசில், மொரோக்கோ, இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் கண்காட்சிகளை நடத்தி வருகின்றது.

சர்வதேச ரீதியாக உற்பத்தி செய்யப்படும் நவீன கருவிகளை அறிமுகப்படுத்தி ஆடைக்கைத்தொழில் துறையையும் ஜவுளித்துறையையும் மேலும் வளப்படுத்தி சர்வதேச வர்த்தக வாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பதே இக்கண்காட்சியின் நோக்கமாகும். இலங்கையின் ஆடைக்கைத்தொழில் துறை மற்றும் ஜவுளி நகைகளை சர்வதேச ரீதியில் போட்டியிடும் அளவுக்கு உற்பத்திகளை அதிகரிப்பதுடள் கைத்தொழிலாளர்களுக்கான சர்வதேச வாய்ப்புகளை அடையாளம் காணக்கூடியதாகவும் அமையும். அவ்வாறே, இலங்கையின் பொருளாதாரத்துக்கு அந்நிய செலாவணியை ஈட்டுவதற்கான சந்தர்ப்பமாகவும் இருக்கும். அதுமாத்திரமன்றி இக்கண்காட்சியானது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கும் நல்லதொரு வாய்ப்பாகும் அமையும்.

2024 டெக்டெக் இலங்கை வர்த்தக கண்காட்சியானது 11ஆவது தடவையாக நடைபெறுகிறது. தொழில்நுட்பம் மற்றும் ஆடைத் தொழில் இயந்திரம், ஜவுளி ஆகியவற்றின் முன்னணி சந்தைப்படுத்தல் தளமாக இக்கண்காட்சி நடைபெற உள்ளது. சர்வதேச ரீதியாக செயற்படும் முன்னணி நிறுவனங்களின் வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள், வியாபாரிகள் பங்குபற்றும் இந்நிகழ்வில் அதிநவீன தொழில்நுட்பங்களை இக்கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்படும்.

நிலையான மற்றும் நவீன நுட்பங்களை காட்சிப்படுத்தும் வகையில் சர்வதேச மற்றும் உள்ளுர் வர்த்தக கைத்தொமிலாளர்களுடன் பங்களிப்புடன் ஆரம்பிக்கப்பட்ட இக்கண்காட்சியானது உள்நாட்டு பொருளாதாரம் மற்றும் நவீன நுட்பங்களின் ஊடாக செயற்திறனான உற்பத்திக்கு வழியேற்பட்டுள்ளது என செம்ஸ் குளோபல் வர்த்தக கண்காட்சியின் நிறைவேற்று பணிப்பாளர் எஸ்.எஸ். சர்வார் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT