Thursday, April 25, 2024
Home » யாழ். பல்கலையில் சர்வதேச தாய்மொழி தின நிகழ்வுகள்

யாழ். பல்கலையில் சர்வதேச தாய்மொழி தின நிகழ்வுகள்

by Prashahini
February 21, 2024 2:44 pm 0 comment

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மொழியியல் ஆங்கிலத்துறையின் ஏற்பாட்டில் சர்வதேச தாய்மொழி தினம் நிகழ்வுகள் இன்று (21) இடம்பெற்றன.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இன்று காலை 9.30 மணியளவில் மொழியல் ஆங்கிலத்துறை தலைவர் கவிதா நவகுலன் தலைமையில் இந்நிகழ்வுகள் ஆரம்பமாகின.

இதன்போது “தாய்மொழி பற்றிய கருத்தியல்” எனும் தலைப்பில் சிக்காக்கோ பல்கலைக்கழக பேராசிரியர் இ.அண்ணாமலை நிகழ்நிலையில் உரையாற்றினார்.

இந்நிகழ்வில் கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம், இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாணம் – பிரபாகரன் டிலக்சன்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT