Home » அரச துறையில் ஓய்வூதியத்தின் சம்பளச் செலவு கணிசமாக அதிகரிப்பு

அரச துறையில் ஓய்வூதியத்தின் சம்பளச் செலவு கணிசமாக அதிகரிப்பு

- ஓய்வூதிய வேலைத்திட்டம் குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி

by Prashahini
February 21, 2024 10:39 am 0 comment

சனத்தொகை கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் எதிர்பாராத பொருளாதார மற்றும் சமூக சரிவுகளுக்கு ஒரு நாட்டில் உள்ள ஒவ்வொரு நபரும் முகங்கொடுக்கும் சமூக பாதுகாப்பு வலையில் உறுப்பினராக உள்ளனர்.

சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கிடையே உள்ள இடையீடு இல்லாமை, சமூகப் பாதுகாப்புப் பலன்களை வழங்குவதன் நோக்கங்களைத் தவறாகப் புரிந்துகொள்வது, நன்மைகளை வழங்குவதற்குப் போதுமான நிதியைப் பராமரிக்க இயலாமை மற்றும் சரியான நேரத்தில் அறிவியல் பூர்வமான கணிப்புகள் இல்லாமல், தற்காலிக அரசியல் ஆதாயத்தின் அடிப்படையில் சமூகப் பாதுகாப்புப் பலன்களை வழங்குவதற்கான முடிவுகளால் ஒவ்வொரு ஓய்வூதியமும் அல்லது சமூகப் பாதுகாப்புப் பயனாளிகளின் நிதியும் நிலையற்றதாகிவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நிலையியற் கட்டளைகள் 27 (2) இன் கீழ் நேற்று (20) பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

சம்பள முரண்பாடுகளோடு தற்போதும் ஒய்வூதியம் பெற்று வரும் 2016 – 2020 ஆம் ஆண்டுக்கிடைப்பட்ட ஓய்வூதியம் பெறும் 112,000 ஓய்வூதியர்களின் முரண்பாடுகள் எப்போது தீர்க்கப்படும்? ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படும் 2,500 வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு தற்போது பணிபுரியும் அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை.

கடந்த 10 ஆண்டுகளில் அரச துறையில் ஓய்வூதியத்தின் சம்பளச் செலவு கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பு தொடர்பில் அடுத்த 10 வருடங்களுக்கு முன்வைக்கப்பட்ட கணிப்புகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்.

தொடர்ச்சியான ஓய்வூதிய அதிகரிப்பை அரசாங்கத்தால் தாங்க முடியாது என பல கருத்துக்கள் நிலவி வரும் நிலையில், நிலையான ஓய்வூதிய நலன்களை வழங்குவதற்கான அரசாங்கம் மேற்கொண்டுள்ள பகுப்பாய்வு மற்றும் வேலைத்திட்டம் குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்.

விவசாயிகளின் ஓய்வூதியத் திட்டம் இன்று முற்றிலுமாக வீழ்ச்சியடைந்துள்ளது, எனவே இதனை செயல்படுத்துமாறும், மீனவர் ஓய்வூதியம் தொடர்பிலும் கவனம் செலுத்துமாறும், அது நிலையாக பேணப்பட வேண்டுமென்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

தொடர்பில்லாத ஓய்வூதிய நிதிகள் அல்லது சமூகப் பாதுகாப்புப் பலன்களை வழங்கும் முறையைக் காட்டிலும்,சகல நபரையும் உள்ளடக்கும் வகையில் சமூக பாதுகாப்பு வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT