Thursday, May 16, 2024
Home » யாழில். தவளை ஐஸ்கிறீம் விற்றவருக்கு 5 ,000 ரூபாய் தண்டம்

யாழில். தவளை ஐஸ்கிறீம் விற்றவருக்கு 5 ,000 ரூபாய் தண்டம்

- உணவகம் ஒன்றிற்கு எதிராகவும் வழக்கு

by Prashahini
February 16, 2024 3:18 pm 0 comment

யாழ்ப்பாணம் – செல்வ சந்நிதி ஆலய சூழலில் விற்பனை செய்யப்பட்ட ஐஸ் கிறீமிற்குள் தவளை காணப்பட்டமை தொடர்பிலான வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்ட , விற்பனையாளருக்கு நீதிமன்றம் 5, 000 ரூபாய் தண்டம் விதித்துள்ளது

நேற்று முன்தினம் (14) ஆலய சூழலில் ஐஸ்கிறீம் விற்பனையில் ஈடுபட்டவரிடம், அதனை வாங்கிய நபர் ஒருவரின் ஐஸ்கிறீமிற்குள் தவளை ஒன்று காணப்பட்டது.

அது தொடர்பில் சுகாதார பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , விசாரணைகளை முன்னெடுத்த வல்வெட்டித்துறை சுகாதார பரிசோதகர் ஐஸ் கிறீம் விற்றவருக்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார்.

குறித்த வழக்கு இன்று (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது , ஐஸ்கிறீமை விற்பனை செய்தவர் , சுன்னாகம் பகுதியில் இயங்கும் ஐஸ்கிறீம் தயாரிப்பு நிறுவனத்திடம் கொள்வனவு செய்தே , ஆலய சூழலில் விற்பனை செய்வதாக தெரிவித்துள்ளார்.

அதனை அடுத்து விற்பனை செய்தவருக்கு 5,000 ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டது.

இதேவேளை சந்நிதி ஆலய சூழலில் சுகாதார சீர்கேட்டுடன் நடாத்தி செல்லப்பட்ட உணவகம் ஒன்றிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உணவக உரிமையாளருக்கு 36,000 ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

வரலாற்று சிறப்பு மிக்க சந்நிதி ஆலயத்திற்கு தினமும் வழிபாட்டிற்காகவும் , சந்நிதி ஆலயத்தில் நடைபெறும் திருமண நிகழ்வுகளுக்காகவும் பல நூற்றுக்கணக்கானவர்கள் வருகை தருகின்றனர்.

அவர்கள் ஆலய சூழலில் உள்ள உணவகங்களில் சிற்றுண்டிகள் , குளிர்பானங்களை கொள்வனவு செய்கிறனர். அதனால் , ஆலய சூழலில் உள்ள உணவகங்கள் மற்றும் குளிர்பான விற்பனை நிலையங்களின் சுகாதாரத்தை சுகாதார பரிசோதகர்கள் கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

யாழ்.விசேட நிருபர்

யாழில் தவளையுடன் வழங்கப்பட்ட ஐஸ்கிரீம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT