Monday, May 20, 2024
Home » அக்கரைப்பற்றில் ஆயுர்வேத கிளினிக் திறந்துவைப்பு

அக்கரைப்பற்றில் ஆயுர்வேத கிளினிக் திறந்துவைப்பு

by sachintha
February 16, 2024 10:12 am 0 comment

 

அக்கரைப்பற்று பிரதேசத்தில் சகல வசதிகளையும் கொண்ட சித்தர் பாரம்பரிய ஆயுர்வேத கிளினிக் மற்றும் மருந்தகத்தை தேசிய காங்கிரஸ் தேசியத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா திறந்து வைத்தார்.

இத்திறப்பு விழாவின் போது, ஆயுர்வேத துறைக்கு தொண்டாற்றிய, ஆயுர்வேத வைத்தியர்களுக்கு தேசிய காங்கிரஸ் தேசியத் தலைவர் அதாஉல்லா நினைவுச்சின்னங்களை வழங்கி வைத்தார். இதேவேளை, தேசிய காங்கிரஸ் தேசியத் தலைவர் அதாஉல்லாவுக்கு சித்தர் பாரம்பரிய ஆயுர்வேத நிலையப் பொறுப்பாளர், வைத்தியர் ரிப்னாஸ் நினைவுச்சின்னமொன்றை வழங்கி வைத்தார்.

இவ்விழாவில் உரையாற்றிய தேசிய காங்கிரஸ் தேசியத் தலைவர் அதாஉல்லா,

“பழமை வாய்ந்த எமது பண்டைய வைத்திய முறையான ஆயுர்வேத வைத்தியத் துறையால், எவ்வித பக்க விளைவோ அல்லது பாதிப்போ இல்லை. இந்த வைத்தியத்தில் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளமை மிகவும் வரவேற்கக்கூடியதாகும். இது விடயத்தில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.

 

அட்டாளைச்சேனை குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT