Sunday, May 12, 2024
Home » தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தலைவர் தலைமையிலான குழு வடக்கு விஜயம்

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தலைவர் தலைமையிலான குழு வடக்கு விஜயம்

by Gayan Abeykoon
February 15, 2024 9:52 am 0 comment

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி ரஜிவ் சூரியாராச்சி மற்றும் பொதுமுகாமையாளர் பொறியியலாளர் எம். ஜானக்க தலைமையிலான குழுவினர் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, அனுராதபுரம் ஆகிய மாவட்ட தேசிய வீடமைப்பு அலுவலகங்களுக்குச் சென்று அங்கு பல்வேறு வீடமைப்புத் திட்டங்களை ஆரம்பித்து வைத்தனர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள 106 குடும்பங்களுக்கு வீட்டுரிமைப் பத்திரங்கள் வழங்கப்பட்டதுடன், வீடற்ற 20 குடும்பங்களுக்கு அவர்களது காணியில் வீடுகளை நிர்மாணித்துக் கொள்வதற்காக வீடமைப்புக் கடன் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பிரதித் தலைவர், பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், பிரதிப் பொதுமுகாமையாளர்கள், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அத்துடன் இக்குழுவினர் முல்லைத்தீவு மாவட்ட வீடமைப்பு அலுவலகத்திற்கு விஜயம் செய்து அங்கு கடமை புரியும் ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அவர்களின் பதவி உயர்வு, நிரந்தரமாக்கல் போன்ற விடயங்களுடன் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள வீடமைப்புத் திட்டங்களை அமுல்படுத்தவும் நடவடிக்ைக மேற்கொண்டனர். அதற்கென மாவட்ட முகாமையாளர்கள், ஊழியர்களுடன் கலந்துரையாடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதேவேளை அனுராதபுரம் வீடமைப்பு அலுவலகம் ஊடாக 46 குடும்பங்களுக்கு வீட்டுரிமைப் பத்திரம் வழங்கப்பட்டது. வீடற்ற 115 குடும்பங்களுக்கு அவர்களது காணியில் வீடுகளை நிர்மாணிக்கவென வீடமைப்புக் கடன் வழங்கி வைக்கப்பட்டது.

அஷ்ரப் ஏ. சமத்    

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT