Sunday, May 5, 2024
Home » சீனன்கோட்டை ‘ஸ்டேடியம்’ அணி இரண்டாம் இடம்

சீனன்கோட்டை ‘ஸ்டேடியம்’ அணி இரண்டாம் இடம்

by Gayan Abeykoon
February 15, 2024 4:06 am 0 comment

பேருவளை, அம்பேபிட்டிய “Sussex” விளையாட்டு கழகத்தின் 32ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு சீனன்கோட்டை நளீம் ஹாஜியார் விளையாட்டரங்கில் (13) நடைபெற்ற அணிக்கு 11 பேர் கொண்ட கிரிக்கட் போட்டியின் இறுதிப்போட்டியில் சீனன்கோட்டை, ஸ்டேடியம் அணி இரண்டாம் இடத்தைப்பெற்று ‘ரனஸப்’ கிண்ணத்தையும் ரூ. 60,000 பணப்பரிசிலையும் பெற்றுக்கொண்டது. இப்போட்டியின் பரிசளிப்பு விழாவில் ‘ரனஸப்’ வெற்றிக்கிண்ணத்தை அணியின் சகலதுறை ஆட்டக்காரனான அண்மையில் காலஞ்சென்ற மர்ஹூம் லியாகத்தின் புதல்வர் யஸீத் அதிதியிடமிருந்து பெற்றுக்கொள்வதையும் அணி வீரர்களையும் படங்களில் காணலாம்.இக்காட்சி கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான பார்வையாளர்களையும் மெய்சிலிர்க்க வைத்ததோடு அணியினரும் கண் கலங்கினர்.

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT