வீட்டிற்கு தீவைத்தும் சொத்துக்களை அழித்து அச்சுறுத்தல் விடுத்தும், தமது அரசியல் பயணத்தை எவராலும் தடுத்துநிறுத்த முடியாதென நகர அபிவிருத்தி வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
செய்நன்றி மறவாத கம்பஹா மக்கள் உள்ளவரை தமது அரசியல் பயணத்தில் ஒரு அடியையேனும், தாம் பின்வைக்கத்தயாரில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மினுவாங்கொடை பகுதியில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகள் 1200 பேருக்கு பாடசாலை புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்களை கையளிக்கும் நிகழ்விலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அமைச்சர், பல்வேறு அச்சுறுத்தல்கள் பல்வேறு விதத்தில் எனக்கு விடுக்கபட்டன. இருந்த போதும் எனது பகுதி மக்கள் எமக்கு ஆதரவாகவே உள்ளனர்.இவர்கள் இருக்கும்வரை வெற்றிகரமாக தமது செயற்பாடுகளை முன்னெடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேற்படி நிகழ்வில் 1200 பாடசாலை மாணவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் தலா 7500 ரூபா பெறுமதியான பாடசாலை புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(லோரன்ஸ் செல்வநாயகம்)