– அம்பத்தலவில் அத்தியாவசிய பராமரிப்பு பணி
கொழும்பின் சில பகுதிகளில் இன்று (10) பிற்பகல் 5.00 மணி முதல் 15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு 11, 12, 13, 14, 15 ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் என அந்தச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று (10) பி.ப. 5.00 மணி முதல் நாளை (11) மு.ப. 8.00 மணி வரை 15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும்.
அம்பத்தல நீர் விநியோக கட்டமைப்பை மேம்படுத்தும் வலுசக்தி பாதுகாப்பு திட்டத்தில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நீர் விநியோகம் இவ்வாறு இடைநிறுத்தப்படுவதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதனால் பாவனையாளர்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களுக்கு கவலை தெரிவிததுள்ள தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, ப்பதோடு, நீரை முன்கூட்டியே சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
இது பற்றிய மேலதிக விபரங்களுக்கு 1939 எனும் சபையின் உடனடி தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும் என சபை சுட்டிக்காட்டியுள்ளது.
கொழும்பு 01 – 15 பெயர்கள் (Colombo 01 – 15 Names)
- கொழும்பு 1 – கோட்டை
- கொழும்பு 2 – கொம்பனித்தெரு, யூனியன் பிளேஸ்
- கொழும்பு 3 – கொள்ளுப்பிட்டி
- கொழும்பு 4 – பம்பலப்பிட்டி
- கொழும்பு 5 – ஹெவ்லக் டவுன், கிருலப்பனை, கிருலப்பனை வடக்கு, நாரஹேன்பிட்டி
- கொழும்பு 6 – வெள்ளவத்தை, பாமன்கடை
- கொழும்பு 7 – கறுவாத்தோட்டம்
- கொழும்பு 8 – பொரளை
- கொழும்பு 9 – தெமட்டகொட
- கொழும்பு 10 – மருதானை, பஞ்சிகாவத்தை
- கொழும்பு 11 – புறக்கோட்டை
- கொழும்பு 12 – புதுக்கடை, வாழைத்தோட்டம்
- கொழும்பு 13 – கொட்டாஞ்சேனை, புளூமெண்டல்
- கொழும்பு 14 – கிராண்ட்பாஸ்
- கொழும்பு 15 – மோதறை/முகத்துவாரம், மட்டக்குளி, மாதம்பிட்டிய