Saturday, May 18, 2024
Home » ICC டெஸ்ட் தரவரிசையில் பிரபாத் ஜயசூரிய முன்னேற்றம்

ICC டெஸ்ட் தரவரிசையில் பிரபாத் ஜயசூரிய முன்னேற்றம்

by Rizwan Segu Mohideen
February 8, 2024 8:24 am 0 comment

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை சுழற்பந்து விச்சாளர் பிரபாத் ஜயசூரிய ஐ.சி.சி. டெஸ்ட் பந்துவீச்சாளர் தரவரிசையில் மூன்று இடங்கள் முன்னேறி ஆறாவது இடத்தை பிடித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கடந்த பெப்ரவரி 5 ஆம் திகதி நிறைவடைந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய பிரபாத் ஜயசூரிய இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை பதம்பார்த்து ஆட்ட நாயகன் விருதை வென்றதோடு இலங்கை அணியின் வெற்றிக்கும் உதவினார்.

இதன்மூலம் அவரது ஐ.சி.சி. தரவரிசை புள்ளிகள் 783 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜெஸ்பிரிட் பூம்ரா டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளார்.

இதன்போது அவர் சக அணி வீரரான சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்தர் அஷ்வினை பின்தள்ளியே முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். பந்துவீச்சாளர்களுக்கான ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்த முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளராகவும் அவர் பதிவாகியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிராக விசாக்கில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அவர் மொத்தம் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியே முதல் இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடக்கம் இந்தத் தரவரிசையில் முதலிடத்தை தக்கவைத்த அஷ்வின் தற்போது 3 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். பதிலாக தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா இரண்டாவது இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளார்.

டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் கேன் வில்லியம்சன் முதலிடத்தை தக்கவைப்பதோடு ஆப்கானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த அனுபவ வீரர் அஞ்சலோ மத்தியூஸ் 4 இடங்கள் முன்னேறி 24 ஆவது இடத்தை பிடித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT