Monday, May 13, 2024
Home » நாடளாவிய ரீதியில் இதுவரை 56,541 சந்தேக நபர்கள் கைது
'யுக்திய' சுற்றிவளைப்பு நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் இதுவரை 56,541 சந்தேக நபர்கள் கைது

by mahesh
February 7, 2024 6:10 am 0 comment

யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட திலிருந்து இதுவரை 56,541 பேரை கைதுசெய்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.இந்நடவடிக் கை கடந்த வருடம் டிசம்பர் 17 இல் ஆரம்பிக்கப்பட்டது.

கைதானவர்களில்,போதைப்பொருள் தொடர்பான சந்தேக நபர்கள் 49,558 பேர் என்றும், அவர்களில் 1,817 சந்தேக நபர்கள் தடுத்துவைப்பு உத்தரவின் பேரில் மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ள தாகவும் பொலிஸ் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்துள்ள மேற்படி விடயங்களை அடிப்படையாகக் கொண்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவையில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின்படி, இக்காலத்தில் தேவையான தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். இதற்குள்ள பெரும் தடை போதியளவு நிதி இல்லாமையே.

இவ்வாறான நிலை காணப்பட்டாலும் 2024 இல், ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலையும் நடத்துவதற்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளார். அத்துடன், 2025 ஆம் ஆண்டு மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்தமுடியும் என்ற நம்பிக்கை உள்ளது. 2023 ஆம் ஆண்டில் கணக்காய்வு செய்யப்படாத அறிக்கைக்கிணங்க, கடந்த வருடத்தில் வருமானமாக நாட்டுக்கு கிடைத்துள்ளதில் தேசிய இறைவரித் திணைக்களத்துக்கு 1,550 பில்லியன் கிடைத்துள்ளது. சுங்கத் திணைக்களத்துக்கு 922 பில்லியனும் கலால்வரி திணைக்களத்துக்கு 169 பில்லியனும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்துக்கு 20 பில்லியன் ரூபாவும் கிடைத்துள்ளது. வரி அல்லாத வருமானமாக 219 பில்லியனும் வங்கிகளில் வைப்பீட்டின் மூலம் 303 பில்லியனும் என அனைத்து வகைகளிலும் 2023 ஆம் ஆண்டு அரசாங்கத்துக்கு 03 ட்ரில்லியன் கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT