Monday, May 20, 2024
Home » எம்.ஜி.ஆர் முதல் விஜய் வரை தமிழகத்தில் அரசியலில் குதித்த சினிமா பிரபலங்கள்

எம்.ஜி.ஆர் முதல் விஜய் வரை தமிழகத்தில் அரசியலில் குதித்த சினிமா பிரபலங்கள்

by damith
February 5, 2024 11:48 am 0 comment

இந்திய நடிகர்கள் பலரும் மக்கள் மத்தியில் நல்ல ஒரு பிரபலத்தை பெற்ற பிறகு அரசியலில் இணைந்து அல்லது தங்களுக்கென தனிக்கட்சியை ஆரம்பித்து மக்களுக்காக சேவை செய்ய முயற்சிகள் செய்கிறார்கள்.

எம்.ஜி.ஆர் பல படங்களில் நடித்து மக்கள் மனதை வென்றார். 1977 இல் அ.தி.மு.க கட்சியை தொடங்கி தமிழ்நாட்டின் முதல்வராக அமர்ந்தார். தனது கடைசி மூச்சு வரை முதல்வராகவே இருந்தார்.

ஜெயலலிதா நடிகையாக பல படங்களில் நடித்துள்ளார். இவர் எம்.ஜி.ஆர் உடன் இணைந்து பல படங்களில் நடித்தாலும் கட்சிப் பணியிலும் இணைந்து இருந்தார். அவரது மறைவுக்கு பின் கட்சியை பெரிய கட்சியாக மாற்றி ஆறுமுறை முதல்வராக அமர்ந்தார்.

சிவாஜி கணேசன் நடிப்பால் பல விருதுகளைப் பெற்றுள்ளார். நடிப்பால் பிரபலமான இவர் கட்சி தொடங்கி போட்டியும் இட்டார். ஆனால் அவரால் சினிமாவால் எடுத்த பெயரை அரசியலில் எடுக்க முடியவில்லை.

நகைச்சுவை நடிகரான கருணாஸ் சாதி கட்சி ஒன்றை ஆரம்பித்தார். இவர் சட்டமன்ற உறுப்பினராக அ.தி.மு.க கட்சியில் இருந்து போட்டியிட்டு வென்றார்.

கமல்ஹாசன் மக்கள் நீதி மையம் என்ற கட்சியைத் தொடங்கி சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

அகில இந்திய சமத்துவ கட்சி என்ற பெயரில் நடிகர் சரத்குமார் கட்சி ஆரம்பித்தார். இவர் தென்காசி தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். தற்போது படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இயக்குனர், நடிகர் என சீமான் தமிழ் சினிமாவில் பிரபலமானார். அவர் நாம் தமிழ் கட்சி என்ற பெயரில் கட்சியை ஆரம்பித்து தனிக்கட்சியாக வலம்வந்து கொண்டிருக்கிறார்.

விஜயகாந்த் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டு அவருக்கு எதிராக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவராக தூள் கிளப்பினார். மக்களுக்கு இவர் பல நல்ல செயல்களை செய்துள்ளார் என்பதால், இன்றும் போற்றப்படுகிறார்.

இயக்குனர், இசையமைப்பாளர், நடிகர் என தனக்கென்று தனி இடத்தை உருவாக்கியவர் டி. ராஜேந்தர். இவர் லட்சிய தி.மு.க என்ற கட்சியை தொடங்கினார். ஆனால் இதுவரையில் எங்கும் போட்டியிடவில்லை.

நடிகர் கார்த்திக் மனித உரிமை காக்கும் கட்சி என்ற பெயரில் கட்சியைத் தொடங்கினர். பின்னர் அதை எந்தவித செயலிலும் ஈடுபடாமல் விட்டுவிட்டார்.

இயக்குனர், நடிகர் என பல பரிமாணங்களில் ஜொலித்தவர் கே. பாக்யராஜ். அவர் எம்.ஜி.ஆர் பெயரில் கட்சி ஆரம்பித்தார். ஆனால் அவரை மக்கள் அரசியல்வாதியாக ஏற்றுக்கொள்ளவில்லை. நடிகர் விஜய் தனது சினிமா வாழ்க்கையில் முன்னனி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரில் கட்சியைத் தொடங்கியுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT