Tuesday, May 14, 2024
Home » உலக விவகாரங்களை அணுகுவதில் முக்கிய பாத்திரமாக உருவெடுத்துள்ள சவூதி அரேபியா

உலக விவகாரங்களை அணுகுவதில் முக்கிய பாத்திரமாக உருவெடுத்துள்ள சவூதி அரேபியா

இலங்கையுடனும் உறவுகளை பலப்படுத்தும் நடவடிக்ைககள்

by Gayan Abeykoon
February 1, 2024 8:00 am 0 comment

வூதி அரேபியா உலக அரசியல் அரங்கில் ஒரு முக்கிய இராஜதந்திர கதாபாத்திரமாக உருவெடுத்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு முழுவதும், சவூதி அரேபிய இராச்சியம் குறிப்பிடத்தக்க சர்வதேச உச்சிமாநாடுகளை நடத்தியது. ஓகஸ்ட் மாதம், உக்ரேனிய நெருக்கடி பற்றிய கலந்துரையாடலுக்காக சுமார் 40 நாடுகளைச் சேர்ந்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களை வரவழைத்து ஜித்தா நகரில் உச்சிமாநாட்டை நடத்தியது. வளைகுடா நாடுகளின் கூட்டுறவுக் கவுன்சில் (GCC) மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு (ASEAN) ஆகியன தங்கள் தொடக்க உச்சிமாநாட்டை ஒக்டோபர் மாதத்தில் சவூதியில் நடத்தின. காசாவின் போர் நிலைமைக்கு தீர்வுகாணும் வகையில், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை நிவர்த்தி செய்ய நவம்பர் மாதம் ரியாத் நகரில் ஒரு அரபு-இஸ்லாமிய உச்சி மாநாட்டைக் கூட்டியது. இதைத் தொடர்ந்து சவூதி-ஆபிரிக்க உச்சிமாநாடு நடைபெற்றது. மேலும் கடந்த ஆண்டு இறுதிப் பகுதியில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் சவூதிக்கான விஜயத்தைத் தொடர்ந்து ஒரு முக்கிய சவுதி-_ரஷ்ய உச்சிமாநாடு நடைபெற்றது.  

சூடானில் உள்நாட்டுப் பிரச்சினைகளால் ஏற்பட்ட பதற்ற நிலையின் போது சவூதி தனது கடற்படையை பயன்படுத்தி மேற்கொண்ட மீட்புப்பணி உலகளவிலும் பாராட்டப்பட்டது.

அரசியல்சார் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளும் நோக்கில், வளைகுடா நாடுகளின் கூட்டுறவுக் கவுன்சில் (GCC) மற்றும் ஐந்து மத்திய ஆசிய நாடுகளின் (C5) தலைவர்களை இணைத்து ஜூலை மாதம் ஜித்தா நகரில் சவூதி ஒரு உச்சிமாநாட்டை நடத்தியது.

ஓகஸ்ட் மாதம், உக்ரைன் போர் விவகாரம் தொடர்பாக ஜித்தா நகரில் ஒரு அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

சவூதி தனது சுறுசுறுப்பான வெளியுறவுக் கொள்கையை மேம்படுத்தும் விதத்தில் , நவம்பர் மாதம் ரியாத் நகரில் சவூதி-ஆபிரிக்க உச்சிமாநாட்டை நடத்தியது.

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான இளவரசர் முஹம்மத் பின் சல்மான், உச்சிமாநாட்டின் போது ஆபிரிக்காவில் மன்னர் சல்மான் மேம்பாட்டு முன்முயற்சித் திட்டத்தை நிறுவுவதாக அறிவித்தார்.

காஸா மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து நிலைமையின் உக்கிரம் காரணமாக, நவம்பர் மாதம் ஒரு அரபு-இஸ்லாமிய உச்சிமாநாட்டிற்கு சவுதி அரேபியா அழைப்பு விடுத்தது. ரியாத் நகரில் நடைபெற்ற இவ்வுச்சிமாநாட்டில் 57 க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்றன.

சவூதி கரீபியனினருடனான (CARICOM) தனது முதல் உச்சிமாநாட்டை நவம்பர் மாதத்தில் நடத்தியது. 2023 ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் சவூதி அரேபியாவிற்கு இராஜதந்திர விஜயமொன்றை மேற்கொண்டு பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் சல்மானோடு பல கட்ட சந்திப்புகளை நடத்தினார்.

சவூதி மற்றும் இலங்கைக்கு இடையிலான வரலாற்று ரீதியான உறவுகளையும் தாண்டி, பாரம்பரியமாக புலம்பெயர் தொழிலாளர்களின் நலன் மற்றும் ஹஜ் உம்ரா விவகாரங்கள், பொருளாதாரம்சார் நலன்கள் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

விஷன் 2030 என்ற இலட்சிய திட்டத்துடன் சர்வதேச அரங்கில் முன்னணிப் பாத்திரத்தை சவூதி அரேபியா வகிக்கும் நிலையில், இலங்கையும் தற்போது சவூதியுடனான பன்முக உறவுகளை மேம்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், சவூதி அரேபியாவில் இருந்து இலங்கைக்கான முதலாவது இருதரப்பு அமைச்சர்களின் விஜயமானது சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் கௌரவ பைசல் பின் பர்ஹான் அவர்கள் இலங்கைக்கு மார்ச் 2022 இல் விஜயம் செய்ததில் இருந்து ஆரம்பமானது. கடந்த மார்ச் 2022 முதல் ஜூன் 2023 இற்கு இடைப்பட்ட காலத்தில் இலங்கையில் இருந்து சவூதிக்கு 7 அமைச்சர்கள் விஜயம் செய்துள்ளனர். இதில் ஜனவரி 2023 இல் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் கௌரவ அலி சப்ரியின் விஜயமும் அடங்கும்.

இலங்கையும் சவூதி அரேபியாவும் இடையில் கடந்த 2022-23 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் சில இருதரப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகியுள்ளன.

இலங்கை மற்றும் சவூதி அரேபியாவுக்கு இடையில் நிலவி வரும் இருக்கமான உறவானது மேலும் பல முன்னேற்றகரமான இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்த பரிய பலமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காலித் ரிஸ்வான்…

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT