அன்பின் பாதை எண்ணம்போல் வாழ்க்கை’ கலை இலக்கிய மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ராணி சீதரனின் ‘கடவுள்தான் அனுப்பினாரா’ என்ற நூல் அறிமுக விழா திருகோணமலை நகராட்சி மன்ற பொதுநூலக கேட்போர் கூடத்தில் சமீபத்தில் நடைபெற்றது.
‘அன்பின் பாதை எண்ணம்போல் வாழ்க்கை’ கலை இலக்கிய மன்றத்தின் தலைவர் கனக. தீபகாந்தன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவுக்கு பிரதம அதிதியாக ஓய்வுபெற்ற அதிபர் சிரேஷ்ட ஊடகவியலாளர் திருமலை நவம் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
சிறப்பு அதிதிகளாக வைத்தியலிங்கம் ஜெயச்சந்திரன், சிரேஷ்ட சட்டத்தரணி
சுபாசினி சித்திரவேலு, இலங்கை மத்திய வங்கியின் கிழக்கு மாகாண பிராந்திய முகாமையாளர் க.பிரபாகரன், கணக்காளர் தயாளலிங்கம் பிரசாதனன் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நூலின் அறிமுகம் மற்றும் நயவுரையை எழுத்தாளர் தில்லைநாதன் பவித்திரன்,
நன்றியுரையை அன்பின் பாதை றொசில்டா அன்டன் ஆகியோர் நிகழ்த்தினர். இந்நிகழ்வில் எழுத்தாளர்கள், கவிஞர்கள், பிரமுகர்கள் என பல நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டதுடன், அதிதிகள் சமகால ஆக்கபூர்வமான கருத்துக்களையும் தெளிவுரைகளையும் வழங்கியிருந்தனர்.
எம்.எப். நவாஸ் (திராய்க்கேணி தினகரன் நிருபர்)