அமெரிக்காவில் முதல் முறையாக கொலைக் குற்றவாளி கென்னத் இயுஜன் ஸ்மித்துக்கு நைதரசன் வாயு செலுத்தப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இந்த தண்டனைக்கு எதிராக உச்ச நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் மேற்கொள்ளப்பட்ட இரு மேன்முறையீடுகளும் தோல்வியடைந்த நிலையில் அமெரிக்க நேரப்படி நேற்று முன்தினம் (25) முகக்கவசம்வழியாக நைதரசன் வாயு செலுத்தப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
வாயு செலுத்தப்பட்ட இரண்டு தொடக்கம் நான்கு நிமிடங்களில் திணறியதோடு சுமார் ஐந்து நிமிடங்கள் கடுமையாக மூச்சு வாங்கிய நிலையில் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது என்று இந்த மரண தண்டனையை நேரில் பார்த்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
58 வயதான ஸ்மித் 1989 ஆம் ஆண்டு போதகர் ஒருவரின் மனைவியை கொலைசெய்த குற்றச்சாட்டுக்காகவே மரண தண்டனை விதிக்கப்பட்டார்.
விச ஊசி பெருவதில் நெருக்கடி நிலவும் சூழலிலேயே அமெரிக்காவின் இரு மாநிலங்களில் நைதரசன் வாயு மூலம் மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.