Thursday, May 16, 2024
Home » யானை தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு

யானை தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு

- தரமான வேலிகளை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை

by Prashahini
January 22, 2024 9:11 am 0 comment

திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செம்பி மோட்டை வயல் நிலப் பகுதியில் நேற்று (21) மாலை யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வயல் காவலுக்கு சென்றவரையே இவ்வாறு யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரனை மூலம் தெரியவருகிறது.

வட்டமடு, ஆயிலியடி எனும் முகவரியை சேர்ந்த 67 வயதான அப்துல் சரீப் முஹம்மது ஏகூப் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தற்போது நெற்செய்கை அறுவடை காலம் நெருங்கிய நிலையில் தனது விவசாய நிலத்தை பாதுகாப்பதற்காக சென்றவரே யானை தாக்குதளுக்கு இலக்கியாகியுள்ளார். குறித்த சம்பவவ இடத்துக்கு திடீர் மரண விசாரனை அதிகாரி எம்.எஸ்.ஷாபி சென்று உயிரிழந்தவரின் சடலத்தை பார்வையிட்டதோடு, இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை வான் எல பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இப்பகுதியில் பாதுகாப்பற்ற யானை வேலி அமைக்கப்பட்டு செயலற்றும் ,முறையற்ற நிலையில் காணப்படுகிறது. தங்களுக்கு விவசாயத்தை தவிர வேறு தொழில்கள் தெரியாது. இவ்வாறு அப்பாவி ஒருவர் யானை தாக்குதளுக்கு பழியாகியுள்ளார். பாதுகாப்பான வேலிகளை அமைக்கவும் விவசாய நிலங்களை இரவு வேலைகளில் பாதுகாக்கவும் முறையான தரமான வேலிகளை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கின்றோம் என விவாயிகள் இதன் போது ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.

தம்பலகாமம் குறூப் நிருபர் – ஏ.எச். ஹஸ்பர் 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT