Thursday, December 12, 2024
Home » கொழும்பிலுள்ள வீட்டுத் திட்டத்திற்கு அருகில் சூடு; ஒருவர் மரணம்

கொழும்பிலுள்ள வீட்டுத் திட்டத்திற்கு அருகில் சூடு; ஒருவர் மரணம்

- முச்சக்கரவண்டியில் வந்து துப்பாக்கிச் சூடு

by Rizwan Segu Mohideen
January 16, 2024 8:36 am 0 comment

கொழும்பு ரந்திய உயன வீட்டுத் திட்டம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு (15) மிஹிஜய செவண பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரந்திய உயன வீட்டுத் திட்டத்திற்கு அருகில், முச்சக்கர வண்டியில் வந்த அடையாளம் தெரியாதவரால் இத்துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மோதறை (முகத்துவாரம்), ரந்திய உயன பகுதியில் வசிக்கும் 40 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மிஹிஜய செவண பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT