Monday, May 20, 2024
Home » வவுனியா வைத்தியசாலை ஊழியர்கள் போராட்டம்

வவுனியா வைத்தியசாலை ஊழியர்கள் போராட்டம்

- சம்பள அதிகரிப்பு குறித்த பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

by Prashahini
January 11, 2024 12:20 pm 0 comment

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சிற்றூழியர்கள் பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து இன்று (11) காலை 10.00 மணியளவில் வைத்தியசாலை நுழைவாயில் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

சம்பள அதிகரிப்பு , ஊழியர் பற்றாக்குறையினை உடன் நிவர்த்தி செய் , வாழ்வாதாரத்தினை அதிகரி போன்ற கோரிக்கைகளை முன்வைத்து 30 நிமிடங்கள் அமைதியான முறையில் இப்போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

வைத்தியசாலை சிற்றூழியர்கள் சுகயீன விடுமுறை வழங்கி கடமையிலிருந்து விலகி குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியா விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT