Home » பசித்த விலங்குகள் இடையே அடைக்கலம் பெறும் மக்கள்

பசித்த விலங்குகள் இடையே அடைக்கலம் பெறும் மக்கள்

by sachintha
January 5, 2024 3:16 pm 0 comment

இஸ்ரேலிய தாக்குதல்களால் எகிப்து எல்லையில் இருக்கும் ரபா பகுதிக்கு இடம்பெயர்ந்த மக்கள் அங்குள்ள மிருகக்காட்சிசாலையின் பசித்த விலங்குகளின் கூடுகளுக்கு இடையே அடைக்கலம் பெற்றுள்ளனர்.

“நிலைமை கவலைக்கிடமாக உள்ளது, இங்கே உணவு, நீர், மருந்து எதுவுமே இல்லை” என்று அந்த மிருக்காட்சிசாலையின் உரிமையாளர் அஹமது ஜுமா குறிப்பிட்டார். இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதலால் பெரும்பாலான மக்கள் தற்போது ரபாவில் அடைக்கலம் பெற்றிருக்கும் நிலையிலேயே அவர்களுக்கு அங்குள்ள மிருகக்காட்சிசாலையும் திறந்துவிடப்பட்டுள்ளது.

“போரை அடுத்து மிருகக்காட்சிசாலை மூடப்பட்டபோதும் இடம்பெயர்ந்த குடும்பங்கள் மற்றும் நண்பர்களுக்காக அது திறக்கப்பட்டது” என்றார் ஜுமா. இவ்வாறு அடைக்கலம் பெற்றவர்கள் விலங்குகளின் கூடுகளுக்கு இடையே கூடாரம் அமைத்துள்ளனர்.

எனினும் இங்கு விலங்குகளுக்கு மற்றும் அடைக்கலம் பெற்றவர்கள் என்று எவருக்கும் போதுமான உணவு இல்லை.

“உணவு கிடைப்பதில்லை. சில விலங்குகளும் இறந்துவிட்டன” என்று கூறி ஜூமா, “சிங்கம் குட்டி ஈன்றபோதும் அதற்கு வழங்க உணவு இல்லாததால் அந்தக் குட்டி இறந்துவிட்டது” என்றார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT