ஜனாதிபதியின் விசேட பணிபுரையின் பெயரில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் மட்டக்களப்பு பகுதியில் இன்று (29) வெள்ளிக்கிழமை பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் விசேட போதைப் பொருள் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சினால் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட போதைப் பொருள் பரிசோதனை மட்டக்களப்பு மாவட்டத்திலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதேவேளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரிந்த பண்டார தலைமையில் வெள்ளிக்கிழமை பொதுமக்கள் அதிகம் கூடும் நகர்புறங்களில் விசேட போதைப் பொருள் பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. நகருக்குள் வரும் சகல பொதுமக்களின் அடையாள அட்டைகள் பரிசோதனை செய்யப்பட்டதுடன் அவர்களது பயணப் பொதிகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.
விசேட மோப்ப நாய்களின் உதவியுடன் விசேட அதிரடி படையினரின் இந்த சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது சந்தேகத்தின் பேரில் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டதுடன் நகரில் 2 பேர் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைக்காக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன். மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக போதைப் பொருள் பரிசோதனை பொலிஸ் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
(பெரியபோரதீவு தினகரன் நிருபர் – வ. சக்திவேல்)