591
ஐபிஎல் வரலாற்றில் பெட் கம்மின்ஸை பின்னுக்குத் தள்ளி அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற சாதனையை மிட்செல் ஸ்டார்க் படைத்துள்ளார்.
மிட்செல் ஸ்டார்க்கை கொல்கத்தா அணி 24.75 இந்திய ரூபாவுக்கு விலைக்கு வாங்கிய நிலையில் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.
2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மினி ஏலம் தற்போது இடம்பெற்று வருகிறது.
இதில் முன்னதாக அவுஸ்திரேலியா அணியின் தலைவர் பெட் கம்மின்ஸ் 20.5 கோடி ரூபாவுக்கு விலைக்கு வாங்கப்பட்டிருந்தார்.
சன்ரைசஸ் ஐதராபாத் அணி அவரை விலைக்கு வாங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
IPL 2024 ஏலம்: வணிந்து ஹசரங்க ரூ. 1 ½ கோடிக்கு வாங்கப்பட்டார்