Friday, May 3, 2024
Home » கடந்த 24 மணி நேர வேட்டையில் 2020 ஆண்கள், 101 பெண்கள் கைது

கடந்த 24 மணி நேர வேட்டையில் 2020 ஆண்கள், 101 பெண்கள் கைது

- ரூ.11 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் மீட்பு

by Prashahini
December 18, 2023 11:29 am 0 comment

குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான நபர்களைத் தேடும் “யுக்திய” நடவடிக்கையில் 2020 ஆண்களும்,101 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 133 பேர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் சிறப்பு நடவடிக்கையில்,

ஹெராயின் 2 கிலோ 232 கிராம்
அஷிஸ் 769 கிராம்
கஞ்சா 178 கிலோ 916 கிராம்
ஏஸ் 35 கிலோ 89 கிராம்
மாவா 626 கிராம்
கஞ்சா செடிகள் – 30,550
போதை மாத்திரைகள் – 3,489 
ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பதில்‌ பொலிஸ்மா அதிபர்‌ தேசபந்து தென்னகோனின்‌ பணிப்புரையின்‌ பேரில்‌ நாடளாவிய ரீதியில்‌ ஆரம்பிக்கப்பட்டுள்ள சுற்றிவளைப்பு நடவடிக்கை இன்றும்‌ (18) இடம்பெறவுள்ளது.

இந்த நடவடிக்கை நேற்று (17) அதிகாலை 4.00 மணி முதல்‌ முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, கொழும்பு மத்தி, நுகேகொட, கல்கிசை, தங்காலை காங்கேசன்துறை, வவுனியா உட்பட நாடளாவிய ரீதியில்‌ 45 பொலிஸ் பிரிவுகளில்‌ இந்த சுற்றிவளைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டது

அதற்கான அனைத்து கண்காணிப்பு பணிகளையும்‌ 9 பிரதி பொலிஸ்மா அதிபர்கள்‌ முன்னெடுத்து வருகின்றனர்‌.

இதன்படி, நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில்‌ 11 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஹசீஷ்‌, கேரள கஞ்சா, ஐஸ்‌ உள்ளிட்ட போதைப்பொருட்கள்‌ கைப்பற்றப்பட்டிருந்தன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT