Thursday, May 2, 2024
Home » இலாபமீட்டும் நிறுவனமாக 2024 இல் இ.போ.ச மாற்றப்படும்

இலாபமீட்டும் நிறுவனமாக 2024 இல் இ.போ.ச மாற்றப்படும்

by gayan
December 14, 2023 7:10 am 0 comment

இலங்கை போக்குவரத்துச் சபையின் விளையாட்டு நிர்வாக சபை நடத்தும் (2023) வர்ணம் வழங்கும் விழா, போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத் துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தலைமையில் நடைபெற்றது.

தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் இலங்கை போக்குவரத்து சபைக்கு வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்த 165 வீரர்களுக்கு இதன்போது

பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இங்கு பேசிய அமைச்சர்,

இலங்கை போக்குவரத்து சபை இலாபமீட்டும் நிலையை அடைய வேண்டும். தனியார் மயமாக்கப்படாமல் இந்த இலக்கை எட்டுவது இன்றியமையாதது. 23,000 ஊழியர்களை கொண்டுள்ள தபால் திணைக்களம் எமது அமைச்சின் கீழ் இயங்குகிறது. அரசாங்க கொள்கைகளை மாற்றும் திறன் இவர்களுக்கு இல்லை.சம்பள உயர்வு கோரினாலும் இந்நேரத்தில் இதை வழங்க முடியாது. அரசாங்க ஊழியகளின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம்,சமுர்த்தி போன்றவற்றுக்கு திறைசேரியில் மேலதிக பணம் இல்லை. மானியங்கள் உள்ளிட்ட சகல நடவடிக்கைகளும் வெளிநாட்டு மற்றும் உள்ளூர் கடன்களை பெற்றே வழங்கப்படுகின்றன.கடனை செலுத்தாத காரணத்தால் அதிக கடன்களை வாங்கும் திறன் தற்போது இல்லை.

ஈட்டப்படும் வருமானத்தில் சம்பளம் கொடுக்க வேண்டிய நிலையில் இலங்கை போக்குவரத்து சபை உள்ளது.

புதிய தலைவர் நியமிக்கப்படுவதற்கு முன்னர், இலங்கையிலுள்ள 107 டிப்போக்களில் 39 டிப்போக்களில் சம்பளம் வழங்க முடியாத நிலை இருந்தது.

மிகவும் திறமையான மற்றும் லாபகரமான டிப்போக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. பொதுப் போக்குவரத்து சேவைகளை வழங்குவதன் மூலம் தனியார் துறையினர் லாபம் ஈட்ட முடியும் என்றால், அரசு ஆதரவுடன் இயங்கும் நிறுவனங்களும் லாபம் ஈட்டலாம்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT