சங்கவி பிலிம்ஸ் நிறுவனமும், சங்கவி தியேட்டரும் உமா அறக்கட்டளையும் ஏற்பாடு செய்துள்ள கலாவிபூஷண விருது வழங்கும் விழாவும் ஆளுமை விருது வழங்கும் விழாவும் இன்று 9ம் திகதி கண்டியில் இடம்பெற உள்ளது.
“வாழும் போதே வாழ்த்துவோம்” என்ற தொனிப்பொருளில் நடத்தப்படும் இவ்விழாவில், பிரதம அதிதியாக முன்னாள் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கா கலந்து கொள்ளவுள்ளார்.
தினகரன், தினகரன் வாரமஞ்சரியின் பிரதம ஆசிரியர் தே. செந்தில்வேலவர் தலைமையில் இடம்பெற உள்ள இவ்வைபவத்தை, உமா அறக்கட்டளையின் தலைவர் தேசபந்து எம். தீபன் ஏற்பாடு செய்துள்ளார். சங்கவி பிலிம்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளரும் சங்கவி தியேட்டரின் உரிமையாளருமான துரைராசா சுரேஸ் கௌரவ அதிதியாக கலந்து கொள்ளும் இவ்விழா, கண்டி கெப்பிட்டிப்பொல மண்டபத்தில் இன்று 9ம் திகதி சனிக்கிழமை பி.ப 1 மணிக்கு நடைபெறவுள்ளது.
அக்குறணை குறூப் நிருபர்