395
மத்திய பாரிஸின் ஈபிள் கோபுரத்துக்கு அருகில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஜேர்மன் சுற்றுலா பயணி ஒருவர் கொல்லப்பட்டு மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை இரவு இடம்பெற்றிருக்கும் இந்தத் தாக்குதல் தொடர்பில் ஏற்கனவே பாதுகாப்பு கண்காணிப்பில் இருக்கும் 26 வயதான பிரான்ஸ் நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் சுற்றுலா பயணிகளான தம்பதியர் மீது தாக்குதல் இடம்பெற்றிருப்பதோடு டாக்சி ஓட்டுநர் ஒருவர் தலையிட்டு மனைவியின் உயிரை காப்பாற்றி இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து அந்த தாக்குதல்தாரி மேலும் இருவரை தாக்கி இருப்பதோடு அதில் ஒவரின் கண்ணை சுத்தியலால் தாக்கியுள்ளார்.