ஆசியாவின் சொர்கமாக இருந்த நாம் இன்று திருடர்களில் சொர்கமாக மாறியுள்ளதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் தன்னுடன் கடமையாற்றிய ஊழியர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக விளையாட்டுத் துறை அமைச்சுக்கு வருகை தந்திருந்த போது அவர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
அமைச்சர் பதவியில் இருந்து என்னை நீக்கியுள்ளார்கள்தானே. ஜனாதிபதியால் நான் பதவி நீக்கப்பட்டுள்ளேன். எனவே எனக்கு ஆதரவளித்த செயலாளர், பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்க வந்தேன். அதேபோல் ஊடங்களுக்கும் பாரிய நன்றியை தெரிவிக்கிறேன். ஆசியாவின் சொர்கமாக நாம் இருந்தோம். தற்போது திருடர்களின் சொர்கமாக மாறியுள்ளோம். ஒரு விதத்தில் பார்த்தால் திருடர்கள் வெற்றிப் பெற்றுள்ளார். இதுதான் யதார்த்தம். இந்த மோசடியாளர்களுக்கு எதிராக தங்களின் செயற்பாடுகளை நிறுத்த வேண்டாம் என ஊடங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.