205
தரமற்ற இமியூனோகுளோபியூலின் மருந்தை நாட்டிற்கு இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சின் விநியோகப் பிரிவைச் சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப்புலனாய்வு பிரிவினரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சின் மருந்து விநியோகப் பிரிவின் உதவிப் பணிப்பாளர்கள் இருவர், கணக்காளர், கையிருப்பு கட்டுப்பாட்டாளர் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் தொடர்ச்சியாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.