அனுராதபுரம் மாவட்ட முஸ்லிம் கல்வி மேம்பாட்டுக்கான வலையமைப்பின் பிரதான செயற்பாட்டாளர்களுள் ஒருவராகவும், செயற்குழு உறுப்பினராகவும் சமூகம்சார் கல்விப் பணிகளில் ஈடுபட்டுவரும் இலங்கை நிர்வாக சேவை (SLAS) அதிகாரியான ஜே. றழீயுத்தீன் வடமத்திய மாகாண பிரதம அமைச்சின் கல்வித் துறைக்குப் பொறுப்பான சிரேஷ்ட உதவிச் செயலாளரராக உயர்வு பெற்றுள்ளார்.
2008 ஆம் ஆண்டு இலங்கை விவசாயக் கல்லூரியில் முகாமைத்துவ உதவியாளராக அரச பணியில் இணைந்து கொண்ட ஜே. றழீயுத்தீன், 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை நிர்வாக சேவைக்கான போட்டிப் பரீட்சையில் சித்திடைந்ததன் மூலம் இலங்கை நிர்வாக சேவை அதிகாரியானார். இவர் வவுனியா, பாவற்குளம் ஓய்வு பெற்ற அதிபர் மர்ஹூம் மெளலவி ஜகுபர்த்தீன்_ – சக்கீனா பீவி தம்பதிகளின் புதல்வராவார்.
இவர் தனது 13 வருட பொதுநிர்வாக சேவைக் காலத்தில் ராஜாங்கனை பிரதேச செயலகம், நாச்சாத்துவ பிரதேச செயலகம் என்பவற்றில் உதவி பிரதேச செயலாளராகவும், பதவிய பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளராகவும் பின்னர் வடமத்திய மாகாணத்தின் விளையாட்டு துறை பணிப்பாளர், வடமத்திய மாகாணத்தின் பிரதான உதவி செயலாளர் ஆகிய பொறுப்புகளை நிறைவேற்றிய நிலையில், தற்போது வடமத்திய மாகாண சபையின் பிரதம அமைச்சின் கல்வித் துறைக்குப் பொறுப்பான சிரேஷ்ட உதவிச் செயலாளராக உயர்வு பெற்றுள்ளார்.
டப்ளியூ.எம்.பைசல்…
(கல்நேவ தினகரன் விசேட நிருபர்)