Friday, July 19, 2024
Home » கம்பஹா மாவட்டத்தில் 12 மணி நேர நீர் விநியோகத் தடை

கம்பஹா மாவட்டத்தில் 12 மணி நேர நீர் விநியோகத் தடை

by Prashahini
November 16, 2023 3:52 pm 0 comment

சப்புகஸ்கந்த மின்சார சபையின் அவசர திருத்த வேலைகள் காரணமாக, பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான மின் விநியோகம் தடைப்படுவதால் ஞாயிற்றுக்கிழமை (19) மு.ப. 8:30 முதல் பி.ப. 8:30 வரையிலான 12 மணி நேர நீர் விநியோகத்தடை பின்வரும் பகுதிகளில் அமுலாகும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

பேலியகொட, வத்தளை, ஜா–எல, கட்டுநாயக்க – சீதுவ நகரசபை பகுதிகள், களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, ஜா–எல, கட்டானை, மினுவாங்கொடை ஆகிய பிரதேச சபை பகுதிகள் மற்றும் கம்பஹா பிரதேச சபை எல்லைக்குட்பட்ட சில பகுதிகள் நீர் விநியோகத் தடையினால் பாதிக்கப்படும்.

இதனால் பாவனையாளர்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை கவலை தெரிவிப்பதோடு, நீரை முன்கூட்டியே சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

இதுபற்றிய மேலதிக விபரங்களுக்கு 1939 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும்.

பேருவளை பி.எம். முக்தார்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT