Home » பொருளாதார நெருக்கடியை ஒரே பட்ஜட்டில் நிவர்த்திக்க முடியாது

பொருளாதார நெருக்கடியை ஒரே பட்ஜட்டில் நிவர்த்திக்க முடியாது

by gayan
November 16, 2023 6:00 am 0 comment

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியதன் பின் மறுசீரமைப்பை மேற்கொள்வது அவசியம்

இலங்கையின் பொருளாதார நெருக்கடியை ஒரேயொரு வரவு செலவு திட்டத்தினால் தீர்த்துவிட முடியாதெனவும், இதற்கு தீர்வு காணும் வகையில் பாதையை மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கொழும்பு சங்ரீலா ஹோட்டலில் நேற்று (15) கொழும்பு பல்கலைக்கழகத்தின் வணிக முகாமைத்துவ பட்டப்பின்படிப்புப் பட்டதாரிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரவு செலவுத் திட்டம் தொடர்பிலான கலந்துரையாடல் நிகழ்விலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கான

வேலைத்திட்டத்தை செயற்படுத்திய பின்னர் பொருளாதார மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளலாம். இதன்போதே, வலுவான பொருளாதாரமொன்றை கட்டியெழுப்ப முடியும்.

மாற்றம் காணும் சூழலுக்கு ஏற்ப மாறுபடுவதனூடாகவே சாத்தியமான தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும். இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்துக்கு அந்த முறைமை மிகவும் அவசியமானது. புதிய சமூகமொன்றை கட்டியெழுப்பும் நோக்கிலேயே அஸ்வெசும நலன்புரித் திட்ட கொடுப்பனவுகள் மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான சூழலை உருவாக்கும் வகையில், இம்முறை வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

தற்போது காஸா எல்லை பகுதியில் நடைபெற்று வரும் மோதல்கள் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளை பாதிக்கக் கூடும். இதனால் வரவு -செலவு திட்டத்தின் சாதக தன்மைகள் மாறக்கூடும். அதனாலேயே உலக பலவான்களுடன் இணைந்து காஸா எல்லை பகுதியில் நடைபெறும் மோதல்களை தடுக்க முற்படுகிறோம்.

மத்திய கிழக்கின் செயற்பாடுகள் இலங்கையில் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

கடந்த வருடத்தில் இலங்கை எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக பொருளாதாரத்தை மீண்டும் நிலைப்படுத்த வேண்டியது அவசியம். அதன் பின்னரே பொருளாதாரத்தை மறுசீரமைக்க வேண்டும்.

ான் முன்வைத்த முதலாவது வரவு செலவு திட்டத்தில் பொருளாதார நிலைப்படுத்தலுக்கான யோசனைகளை முன்வைத்திருந்தேன்.

தற்போதைய வரவு செலவு திட்டத்தில் பொருளாதார மறுசீரமைப்புக்கான யோசனைகளை முன்வைத்துள்ளேன். ஒரேயொரு வரவு செலவு திட்டத்தைக் கொண்டு நாட்டின் அனைத்துப் பொருளாதார பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டுவிட முடியாது. தேர்தலை இலக்கு வைத்தே இம்முறை வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டிருப்பதாக பலரும் கூறுகின்றனர். து உண்மையல்ல. ம்முறை வரவு செலவுத் திட்டம் புதிய பொருளாதாரத்திற்கான பிரவேசத்தை ஏற்படுத்தல்,

அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு, ஸ்வெசும கொடுப்பனவுகளை அதிகரித்தல், சிறிய மற்றும் மத்திய தர தொழில்முயற்சிகளை வலுவூட்டல் உட்பட அனைத்துத் துறைகளையும் உள்வாங்கியதாக அமைந்துள்ளதென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT