வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் பணத்தின் மூலம் கடந்த ஒக்டோபர் மாதத்தில் மட்டும் 517.4 மில்லியன் அமெரிக்க டொலர் நாட்டுக்கு கிடைத்துள்ளதாக, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் மனுஷ நாணயக்கார தனது எக்ஸ் தளத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தாம், அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்ற 2022 ஆம் ஆண்டு மே மாதம் முதல் இவ்வருடத்தின் ஒக்டோபர் மாத இறுதி வரை, வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்பியதன் மூலம் 7.6 பில்லியன் அமெரிக்க டொலர் பெறப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மனுஷ நாணயக்கார அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
நமது புலம்பெயர் தொழிலாளர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு இது சான்றாகுமென்றும் அமைச்சர் மனுஷ குறிப்பிட்டுள்ளார்.