288
ஜேர்மனியின் Aida Bella சொகுசுக் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. Aida Bella சொகுசுக் கப்பல் நேற்று வியாழக்கிழமை (09) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
இலங்கை வரும் கப்பலில் 1,900 பயணிகள் மற்றும் 730 பணியாளர் வருகை தந்துள்ளனர். 13 அடுக்கு மாடிகளைக் கொண்டுள்ள இக்கப்பலில் ஆயிரத்து 25 விருந்தினர் அறைகள், 12 மதுபானசாலைகள், 08 நீச்சல் தடாகங்கள், 03 ஓய்வறைகள் மற்றும் 07 உணவகங்கள் உள்ளன.
Aitken Spence PLC இன் துணை நிறுவனமான Aitken Spence Shipping Ltd நாட்டின் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில், கப்பல்களை இயக்குபவர்களுக்கான சேவைகளை தொடர்ந்து வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.