– பிரதமர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றில் தெரிவிப்பு
கிராம உத்தியோகத்தர்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்கான பரீட்சை இவ்வருடம் டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெறும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளதாக, பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்னவினால் பிரதமரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் தினேஷ் குணவர்தன இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஜூன் 30ஆம் திகதி நிலவரப்படி இலங்கையில் 2,763 கிராம உத்தியோகபூர்வ வெற்றிடங்கள் இருப்பதாகவும், 2021 மார்ச் 31ஆம் திகதி வரை காணப்பட்ட கிராம உத்தியோகத்தர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு இலங்கைப் பரீட்சை திணைக்களத்தினால் பரீட்சை நடத்துவதற்கும், தற்போது காணப்படும் வெற்றிடங்களை நிரப்ப அரச சேவையில் ஊழியர்களை உள்வாங்கவும், அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு இலங்கைப் பரீட்சை திணைக்களத்தினால் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பரீட்சை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.