லாஃப்ஸ் (Laugfs Gas) சமையல் எரிவாயுவின் விலையில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பில் இன்று (06) திங்கட்கிழமை தீர்மானிக்கப்படவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. கொழும்பில், இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் விலை 95 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இவ்விலை திருத்தத்துக்கு அமைய 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன், மூவாயிரத்து 565 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது. 5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் விலை 38 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை ஆயிரத்து 431வாக விற்கப்படவுள்ளது. 2.3 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் விலை 18 ரூபாவால் உயரந்துள்ளதால், புதிய விலை 668 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.