பத்தரமுல்லை, பெலவத்தை பிரதேசத்தில் அதிபர்கள், ஆசிரியர்கள் முன்னெடுத்த போராட்டத்தின் போது ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு கவலை வெளியிட்டுள்ளது.
ஆசிரியர் – அதிபர் உள்ளிட்ட கல்வித் துறையினர் முரண்பாடுகளை களைவதற்கு முயற்சித்து வரும் வேளையில் இவ்வாறானதொரு நிகழ்வு ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.
அத்துடன் கல்வி அமைச்சர் கல்வி மாநாட்டிற்காக வெளிநாட்டில் இருந்த வேளையில் இடம்பெற்ற இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சர் தனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்வதாக, கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
கல்வி அமைச்சின் முன்பாக இடம்பெற்ற குறித்த ஆர்ப்பாட்டத்தை கலைக்க, பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகத்தை மேற்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.