Monday, October 7, 2024
Home » இன்று முதல் அமுலாகும் மின்சார கட்டண அதிகரிப்பு விபரம்

இன்று முதல் அமுலாகும் மின்சார கட்டண அதிகரிப்பு விபரம்

- 0-60 அலகுகளுக்கு 2 பிரிவுகளாக அதிகரிப்பு; 60 இற்கு மேல் 5 பிரிவுகளாக அதிகரிப்பு

by Rizwan Segu Mohideen
October 20, 2023 11:40 am 0 comment

– மத தலங்களுக்கும் 5 பிரிவுகளாக கட்டண அதிகரிப்பு

இன்று (20) முதல் அமுலாகும் வகையில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய, மின்சாரத்தைப் பயன்படுத்தும் அலகுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப திருத்தப்பட்ட மின்சாரக் கட்டணங்கள் வருமாறு,

  • 0-60 அலகு பாவனை கொண்டோருக்கு
    0-30 அலகுகள் : ரூ. 10 இலிருந்து ரூ.12 ஆக அதிகரிப்பு – ரூ.150 நிலையான கட்டணம் ரூ.180 ஆக அதிகரிப்பு
  • 31-60 அலகுகள்: ரூ. 25 இலிருந்து ரூ.30 ஆக அதிகரிப்பு – ரூ.300 நிலையான கட்டணம் ரூ.180 ஆக அதிகரிப்பு
  • 60 அலகுகளுக்கு மேற்பட்ட பாவனை கொண்டோருக்கு
  • 0-60 அலகுகள் : ரூ. 32 இலிருந்து ரூ.38 ஆக அதிகரிப்பு – நிலையான கட்டணம் ரூ. 400 இலிருந்து ரூ. 480
  • 61-90 அலகுகள் : ரூ. 35 இலிருந்து ரூ.41 ஆக அதிகரிப்பு – ரூ.400 நிலையான கட்டணம் ரூ.480 ஆக அதிகரிப்பு
  • 91-120 அலகுகள் : ரூ. 50 இலிருந்து ரூ.59 ஆக அதிகரிப்பு – ரூ.1,000 நிலையான கட்டணம் ரூ.1,180 ஆக அதிகரிப்பு
  • 121-180 அலகுகள் : ரூ. 75 இலிருந்து ரூ.59 ஆக அதிகரிப்பு – ரூ.1,500 நிலையான கட்டணம் ரூ.1,770 ஆக அதிகரிப்பு
  • 181 இற்கு மேற்பட்ட அலகுகள் : ரூ. 75 இலிருந்து ரூ.89 ஆக அதிகரிப்பு – ரூ.2,000 நிலையான கட்டணம் ரூ.2,360 ஆக அதிகரிப்பு
  • மத ஸ்தலங்கள், அறக்கட்டளை நிறுவனங்கள்
  • 0-30 அலகுகள் : ரூ. 10 இலிருந்து ரூ.12 ஆக அதிகரிப்பு – ரூ.150 நிலையான கட்டணம் ரூ.180 ஆக அதிகரிப்பு
  • 31-90 அலகுகள்: ரூ. 20 இலிருந்து ரூ.24 ஆக அதிகரிப்பு – ரூ.250 நிலையான கட்டணம் ரூ.300 ஆக அதிகரிப்பு
  • 91-120 அலகுகள் : ரூ. 35 இலிருந்து ரூ.41 ஆக அதிகரிப்பு – ரூ.600 நிலையான கட்டணம் ரூ.710 ஆக அதிகரிப்பு
  • 121-180 அலகுகள்: ரூ. 45 இலிருந்து ரூ.53 ஆக அதிகரிப்பு – ரூ.1,500 நிலையான கட்டணம் ரூ.1,770 ஆக அதிகரிப்பு
  • 181 இற்கு மேற்பட்ட அலகுகள்: ரூ. 50 இலிருந்து ரூ.59 ஆக அதிகரிப்பு – ரூ.2,000 நிலையான கட்டணம் ரூ.2,360 ஆக அதிகரிப்பு

இலங்கை மின்சார சபை விடுத்த மின்சார கட்டண அதிககரிப்பு கோரிக்கையை அடுத்து, கடந்த ஒக்டோபர் 18ஆம் திகதி BMIC இல் இடம்பெற்ற, பொது மக்கள் கருத்தறியும் திட்டத்தின் பின்னர் சுமார் 18% மின்சார கட்டண அதிகரிப்பிற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image

20-OCT-2023-CEB-Tariff-Revision

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x