Thursday, May 2, 2024
Home » சமூக ஊடகங்கள் மூலம் அவதூறு பழிவாங்கலைத் தடுக்க கண்காணிப்பு

சமூக ஊடகங்கள் மூலம் அவதூறு பழிவாங்கலைத் தடுக்க கண்காணிப்பு

-முறைமையொன்று அவசியம் என்கிறார் வஜிர எம்.பி

by sachintha
October 17, 2023 6:00 am 0 comment

சகலருக்கும் சமூக ஊடக சுதந்திரம் இருந்தாலும் பிறரை அவமதிக்கும் நோக்கில் அல்லது பழிவாங்கும் எண்ணத்தில் அதனைப் பயன்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில், விதிகள் கொண்டுவரப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

சிங்கப்பூரின் தகவல் மற்றும் தொடர்பு ஊடக அதிகார சபை சட்டம் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்ததைப் போன்று, உண்மையான தகவல்களை அறிந்துகொள்ளும் பிரஜைகளின் உரிமையை உறுதிப்படுத்தி இலங்கையை உலகின் தலைசிறந்த நிலைக்கு உயர்த்த தற்போதைய அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“ஒன்லைன் முறைகளின் பாதுகாப்பு தொடர்பான ஆணைக்குழுவின் நியமனத்தின் ஊடாக, ஆய்வு ரீதியிலான ஊடகவியலாளரும் அதேபோன்று ஆராய்ந்து பார்க்கக்கூடிய பிரஜையும் உருவாக்கப்படுவர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இணையத்தளத்தின் ஊடாக அவதூறான மற்றும் பொய்யான தகவல்களை வழங்குபவர்கள் நீதித்துறை மூலம் தண்டிக்கப்படுவர்.எனினும், ஆணைக்குழுவுக்கு தண்டனை வழங்கும் உரிமை இல்லை. உலகிலும் இலங்கையிலும் தொடர்பாடல் வளர்ச்சியடைந்ததன் மூலம் மக்கள் பல்வேறு அனுகூலங்களைப் பெற்றனர். ஆனால் இறுதியில் மக்களை தவறாக வழிநடத்தவும் அவமானப்படுத்தவும் இந்த தொழினுட்பம் பயன்படுத்தப்படுகின்றமை வருந்தத்தக்கது. எனவே, இந்த சமூக ஊடகங்களை உருவாக்கியவர்களே அதற்கான விதிகளை கொண்டு வந்தனர்.

தற்போது இலங்கையிலும் சமூக ஊடகக் கண்காணிப்பின் அவசியம் குறித்து பல்வேறு கருத்தாடல்கள் இடம்பெற்று வருகின்றன.

நாட்டில் அனைத்துத் தொலைக்காட்சி அலைவரிசைகளும் தொலைக்காட்சிச் சட்டத்தால் மாத்திரமே கட்டுப்படுத்தப்படுகின்றன. அது, எவ்வகையிலும் நியாயமான ஊடக வளர்ச்சிக்கு பொருத்தமற்றது.

அந்த வகையில் உலகின் வளர்ச்சியடைந்த நாடுகள் தகவல் தொடர்பாடலை அல்லது ஊடகங்களை ஒழுங்குபடுத்தவும் மக்களுக்கு சரியான தகவல்களை வழங்கவும் சட்ட விதி முறைகளை தயாரித்துள்ளன.

உதாரணமாக, சிங்கப்பூரின் தகவல் தொடர்பாடல் ஊடக மேம்பாட்டு அதிகார சபைச் சட்டம் சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது.

உலகில் உள்ள Facebook உள்ளிட்ட ஏனைய தகவல் பரிமாற்றத் தளங்கள் மக்களுக்கு தீங்கு விளைவிப்பதைக் கட்டுப்படுத்தல், சரியான தகவல்களை சிறந்த முறையில் மக்களுக்கு வழங்கல் மற்றும் தவறான தகவல்களை வழங்குபவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துதல் ஆகியவை கற்ற மற்றும் முன்னேறி வரும் ஒரு சமூகத்துக்கு மிக முக்கியமான விடயம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அப்படியானால், ஆசியாவிலும் உலகிலும் இலங்கை வலுப்பெற ஊடகங்களின் செயற்பாடுகள் பலப்படுத்தப்பட வேண்டும். என்றும் அவர்மேலும்தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT