Home » ரயில் சாரதி இந்திக்கவுக்கான தடையுத்தரவு ஒப்படைப்பு

ரயில் சாரதி இந்திக்கவுக்கான தடையுத்தரவு ஒப்படைப்பு

அமைச்சர் பந்துல மீதான அவதூறு வழக்கு

by gayan
October 5, 2023 6:40 am 0 comment

அமைச்சர் பந்துல குணவர்தன மீதான அவதூறு வழக்கின் பிரதிவாதியான ரயில் சாரதி இந்திக்க தொடம்கொடவுக்கு நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவுப் பத்திரம் பிஸ்கால் மூலம் அவரது வீட்டுக்குச் சென்றே அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ரயில்வே திணைக்களத்தின் நிர்மாண ஒப்பந்தங்களை வழங்குவது தொடர்பில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன, இந்திய நிறுவனத்திடம்

இலஞ்சம் பெற்றதாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பொய்யான அறிக்கைகளை வெளியிட்டு அமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக இந்த வழக்கு தொடரப்ட்டிருந்தது.

இவ்வழக்கை விசாரித்த கொழும்பு இலக்கம் 01 மாவட்ட நீதிமன்றம், ரயில் சாரதியான இந்திக்க தொடம்கொடவுக்கு எதிராக அண்மையில் தடை உத்தரவு பிறப்பித்தது.

கொழும்பு இலக்கம் 01 மாவட்ட நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு நேற்று (04) குற்றஞ்சாட்டப்பட்ட ரயில் சாரதி இந்திக்க தொடம்கொடவிடம் பிஸ்கால் மூலம் அவரது வீட்டுக்கே சென்று கையளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எந்த வகையிலும் நேர்காணலில் செய்திகளை தெரிவிப்பது, தன்னால் அல்லது மற்றொரு நபர் மூலம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அவதூறு செய்யும் வகையில் நடவடிக்கையில் ஈடுபடுவது அல்லது தொடர்ச்சியாக அவதூறு செய்வதற்கு உரிமை இல்லையென

கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தின் இலக்கம் 01 ஆல் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவில் விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அச்சு, வாய்மொழி, சமூக ஊடகங்களில் நேரடியாக அல்லது மற்றொரு நபரின் முகநூலூடாகவே அல்லது மறைமுகமாகவோ பிரதிவாதியால் அல்லது இன்னொருவர் மூலமாகவோ வாதியை அவமதிக்க உரிமை இல்லையெனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT