மெரில்போர்ன் கிரிக்கெட் கழகத்தின் (எம்.சி.சி) உலகக் கிரிக்கெட் குழு தலைவராக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே இந்தக் குழுவில் அங்கத்துவம் பெற்றிருந்த சங்கக்கார இங்கிலாந்து முன்னாள் அணித் தலைவர் மைக் கெட்டினுக்கு பதில் புதிய தலைவராகியுள்ளார். இந்தக் குழுவில் செளரவ் கங்குலி, ஜுலன் கொஸ்வாமி, ஹீதர் நைட், சுசி பேட்ஸ், கிளேர் கோனர், ஜஸ்டின் லங்கர், இயொன் மோர்கள், ரமிஸ் ராஜா, கிராம் ஸ்மித் மற்றும் ரிக்கி ஸ்கரிட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட் கெளன்சிலின் துணை அமைப்பு ஒன்றாக இயங்கும் இந்தக் குழு விளையாட்டில் ஏற்படும் சிக்கல்களை பேசுவதற்கு வருடத்திற்கு இரு முறை கூடுகின்றமை குறிப்பிடத்தக்கது.