சீனாவின் பீஜிங் நகரில் நடைபெற்ற “2023 உலகளாவிய நிலையான போக்குவரத்து அமைப்பு” மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன மாநாட்டின் பின்னர் பீஜிங் வெளிநாட்டு ( Beijing Foreign Studies University) கற்கைகள் பல்கலைக்கழகத்திற்கு விசேட விஜயமொன்றை மேற்கொண்டார்.
கொன்பியூசியஸ் சீன கல்வித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட புலமைப்பரிசிலின் கீழ் பீஜிங் வெளிநாட்டு ஆய்வுகள் பல்கலைக்கழகத்தில் தனது தத்துவவியல் பட்டத்தை அமைச்சர் பெற்றுள்ளார். அங்கு சிங்கள மொழி மூலம் பல்கலைக்கழகத்தில் தமது கற்கைகளை மேற்கொள்ளும் மாணவர்கள் மற்றும் குழுவினருடன் அமைச்சர் எடுத்துக் கொண்டு படம்.